யாருமற்ற
நீரில்லா கிராமத்து நிலத்தில்
முளைத்தெழ விருப்பமில்லை
விரல்தூவிய
விதைகளுக்கும்
பிழைப்புதேடி
கிராமத்து வீட்டை குட்டிசுவர்களாக்கி
மாநகரத்தில் மாடிவீடுகட்டி குடிபெயர்ந்த
கிராமத்து மக்களைப்போல்
பயிர்களும்
தரைவழி பயணப்பட்டது போல...
மாடுகட்டும் தொழுவத்திலோ
ஆடுகட்டும் ஆட்டுகாடியிலோ
இல்லை ஏதோஓர்
புளியமரத்தின்மீதோ
சாய்ந்துகொண்டு
பால்யங்களையும்
வாலிபகாலங்களையும்
அசைபோடுகிறது
என் முப்பாட்டன் ,பாட்டன் ,அப்பன்
வியர்வைசிந்தி
தொட்டுபிடித்து
மாடுகள் கண்ணீர் சிந்தி
இழுத்து உழுத
கலப்பை
மாடுகள் விற்ற வீட்டில்
வைக்கோல்போர் அடையுமிடத்தில்
கட்டிவைத்தபடியே
காய்ந்துகொண்டுயிருக்கிறது
அடுப்பெரிக்கும்
விறகுகள்
இனி
மாடுகள் தட்டப்பயிர்களை தின்றுவிட்டது
சோளப்பயிரை மேய்ந்துவிட்டது என்ற
காரணத்திற்காக காட்டுக்காரரிடம்
திட்டுவாங்கவோ
அல்லது
தாங்கள் எள்ளுப்பயிரை தின்றதுக்காக
அப்பாவிடம் அடிவாங்கும்
வலிகளோ இல்லை
விளையாட்டுகள் மறந்த
சிறுவர்களுக்கு
தன் அழகிய அடையாளங்களை
தொலைத்துவிட்டு
நிம்மதியற்று படுத்திருக்கிறது
மனிதர்களை நிம்மதியாக
உறங்கவைத்த
பழையவீட்டு நிலைக்கதவு
மிச்சமிருக்கும்
ஒவ்வொரு வைக்கோலிலும்
தெரிகிறது
போரடித்த மாடுகளின் காலடிச்சுவடுகள்
No comments:
Post a Comment